-->

இலக்கண வகைகள்

           இலக்கண வகைகள்

1) இலக்கணம் எத்தனை வகைப்படும்?

5

(எழுத்து,

 சொல்,

பொருள்,

 யாப்பு,

 அணி)

2) எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

2

(முதல் எழுத்துக்கள்   சார்பெழுத்துக்கள்)

3) முதல் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

30

(உயிர் எழுத்து 12,

 மெய்யெழுத்து 18)

4) சார்பு எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

10

(உயிர்மெய்,

ஆய்தம்,

உயிரளபெடை,

ஒற்றளபெடை,

குற்றியலிகரம்,

குற்றியலுகரம் ,

ஐகாரக் குறுக்கம் ,

ஔகாரக் குறுக்கம்,

 மகரக் குறுக்கம் ,

ஆயுதக் குறுக்கம்)

5) மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை ?

8

(ண, ன, ந

ல, ழ, ள

ர, ற )

6) சுட்டு எழுத்துக்கள் எத்தனை?

3(அ,இ,உ)

7) வினா எழுத்துக்கள் எத்தனை?

5(எ, யா, ஆ, ஓ, ஏ )

8) இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

4

(பெயர்ச்சொல், 

வினைச்சொல்,

இடைச்சொல்,

உரிச்சொல் )

9) இலக்கிய அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

4

(இயற்சொல், 

திரிச்சொல்,

திசைச் சொல், 

வட சொல்)

10) பெயர்ச்சொல் எத்தனை  வகைப்படும்?

6

(பொருட்பெயர்,

இடப்பெயர்,

காலப்பெயர்,

சினைப்பெயர்,

பண்புப்பெயர்,

தொழிற்பெயர்)

11) நம் முன்னோர்கள் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் எத்தனை வகைப்படுத்தினர்?

2

(இடுகுறிப் பெயர், 

காரணப்பெயர்,

12) குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

6

(நெடில் தொடர்க் குற்றியலுகரம்,

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்,

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்,

வன்தொடர்க் குற்றியலுகரம்,

மென்தொடர்க் குற்றியலுகரம்,

இடைத்தொடர்க் குற்றியலுகரம்)

13) குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

4

(ஐகாரக்குறுக்கம்,

ஔகாரக்குறுக்கம்,

மகரக்குறுக்கம்,

ஆய்தக் குறுக்கம்,)

14) வழக்கு எத்தனை வகைப்படும்?

2

(இயல்பு வழக்கு, 

தகுதி வழக்கு)

15) இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?

3

(இலக்கணமுடையது,

இலக்கணப் போலி,

மரூஉ)

16) தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?

3

(இடக்கரடக்கல்,

மங்கலம்,

குழூஉக்குறி)

17) போலி எத்தனை வகைப்படும்?

3

(முதற் போலி,

 இடைப்போலி,

 கடைப்போலி)

18) தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?

4

(விகுதி பெற்ற தொழிற்பெயர்,

எதிர்மறைத் தொழிற்பெயர்,

முதனிலைத் தொழிற்பெயர்,

முதனிலை திரிந்த தொழிற்பெயர்)

19)ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

6

(பொருளாகுபெயர்,

இடவாகு பெயர்,

காலவாகு பெயர்,

சினையாகு பெயர்,

பண்பாகுபெயர்,

தொழிலாகு பெயர்)

20) எழுத்துகளின் பிறப்பு எத்தனை வகைப்படும்?

2

(இடப்பிறப்பு,

முயற்சிப் பிறப்பு)

21) வினைமுற்று எத்தனை வகைப்படும்?

2

(தெரிநிலை வினைமுற்று,

 குறிப்பு வினைமுற்று)

22) எச்சம் எத்தனை வகைப்படும்?

2

(பெயரெச்சம்,

 வினையெச்சம்)

23) பெயரெச்சம் எத்தனை வகைப்படும்?

2

(தெரிநிலை பெயரெச்சம்,

 குறிப்பு பெயரெச்சம்)

24) வினையெச்சம் எத்தனை வகைப்படும்?

2

(தெரிநிலை வினையெச்சம்,

 குறிப்பு வினையெச்சம்)

25) வேற்றுமை எத்தனை வகைப்படும்?

8

(முதல் வேற்றுமை-எட்டாம் வேற்றுமை)

26) தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

6

(வேற்றுமைத்தொகை,

 வினைத்தொகை,

 பண்புத்தொகை,

 உவமைத்தொகை,

 உம்மைத் தொகை,

 அன்மொழித்தொகை)

27) தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

9

(எழுவாய் தொடர்,

விழித்தொடர்,

வினைமுற்றுத் தொடர்,

பெயரெச்சத் தொடர்,

வினையெச்சத் தொடர்,

வேற்றுமை தொகாநிலைத் தொடர்,

இடைச்சொல் தொடர், 

உரிச்சொல் தொடர்,

அடுக்குத் தொடர்)

28) யாப்பு இலக்கணத்தின் படி செயலுக்கு உரிய உறுப்புகள்?

6

(எழுத்து,

அசை,

சீர்,

தளை,

அடி,

தொடை )

29)அசை எத்தனை வகைப்படும்?

2

(நேரசை,

 நிரையசை)

30)சீர் எத்தனை வகைப்படும்?

4

(ஓரசைச்சீர்,

 ஈரசைச்சீர்,

 மூவசைச்சீர்,

 நாலசைச்சீர்)

31)தளை எத்தனை வகைப்படும்?

7

(நேர் ஒன்றாசிரியத்தளை,

நிரை ஒன்றாசிரியத்தளை,

இயற்சீர் வெண்டளை,

வெண்சீர் வெண்டளை,

கலித்தளை,

ஒன்றிய வஞ்சித்தளை,

ஒன்றாத வஞ்சித்தளை)

32) அடி எத்தனை வகைப்படும்?

5

(குறளடி,

சிந்தடி,

அளவடி,

நெடிலடி,

கலி நெடிலடி)

33) தொடை எத்தனை வகைப்படும்?

8

(மோனைத் தொடை,

எதுகை தொடை,

முரண் தொடை,

இயைபு தொடை,

அளபெடைத் தொடை,

இரட்டைத் தொடை,

அந்தாதித்தொடை, 

செந்தொடை)

34)பா எத்தனை வகைப்படும்?

வெண்பா, 

ஆசிரியப்பா, 

கலிப்பா, 

வஞ்சிப்பா)

35)பதம் எத்தனை வகைப்படும்?

2

(பகுபதம்,

பகாப்பதம்)

36) பகுபதம் எத்தனை வகைப்படும்?

2

(பெயர்ப் பகுபதம்,

வினைப் பகுபதம்)

37) வினைச்சொற்கள் அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படும்?

2

(தனிவினை,

கூட்டுவினை)

38) விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

3

(தோன்றல், 

திரிதல், 

கெடுதல்)

39) எழுத்து வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும்?

4

( உயிரீறு,

மெய்யீறு,

உயிர் முதல்,

மெய்ம் முதல்)

40) குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

6

(வன்தொடர்க் குற்றியலுகரம்,

மென்தொடர்க் குற்றியலுகரம்,

இடைத்தொடர்க் குற்றியலுகரம்,

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்,

ஆய்தத் தொடர் குற்றியலுகரம்,

நெடில் தொடர் குற்றியலுகரம்)

41)ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

16

(பொருளாகு பெயர்,

இடவாகு பெயர்,

காலவாகு பெயர், 

சினையாகு பெயர்,

குணவாகு பெயர்,

தொழிலாகு பெயர்,

எண்ணலளவை ஆகுபெயர்,

எடுத்தலளவை ஆகுபெயர்,

முகத்தலளவை ஆகுபெயர்,

நீட்டலளவை ஆகுபெயர்,

சொல்லாகு பெயர்,

தானியவாகு பெயர்,

கருவியாகு பெயர்,

காரியவாகு பெயர்,

கருத்தாவாகு பெயர்,

உவமையாகுபெயர்)

42) யாப்பின் அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

3

(குறில்,

 நெடில்,

 ஒற்று)

43) பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?

3

(சொல் பின்வருநிலையணி,

பொருள் பின்வருநிலையணி,

சொற்பொருள் பின்வருநிலையணி)

44)உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

3

(மொழி முதல்,

 மொழி இடை,

 மொழி கடை)

45)மொழி எத்தனை வகைப்படும்?

3

(தனிமொழி,

தொடர்மொழி, 

பொதுமொழி)

46) திணை எத்தனை வகைப்படும்?

2

(உயர்திணை, 

அஃறிணை)

47) பால் எத்தனை வகைப்படும்?

5

(ஆண்பால், 

பெண்பால்,

பலர்பால்,

ஒன்றன்பால், 

பலவின்பால்)

48) வினா எத்தனை வகைப்படும்?

6

(அறிவினா,

அறியா வினா,

ஐயவினா, 

கொளல் வினா, 

கொடை வினா, 

ஏவல் வினா )

49) விடை எத்தனை வகைப்படும்?

8

(சுட்டு விடை, 

மறை விடை, 

நேர் விடை, 

ஏவல் விடை, 

வினா எதிர் வினாதல் விடை, 

உற்றது உரைத்தல் விடை, 

உறுவது கூறல் விடை, 

இனமொழி விடை )

50) திணை எத்தனை வகைப்படும்?

10

(வெட்சித் திணை, 

கரந்தைத் திணை, 

வஞ்சித் திணை,

காஞ்சித் திணை, 

உழிஞைத் திணை, 

நொச்சித் திணை, 

தும்பைத் திணை, 

வாகைத் திணை, 

பாடாண் திணை, 

பொதுவியல் திணை )

51) ஓசை எத்தனை வகைப்படும்?

4

(செப்பல், 

அகவல், 

துள்ளல்,

தூங்கல் )

52) வெண்பா எத்தனை வகைப்படும்?

5

(குறள் வெண்பா, 

சிந்தியல் வெண்பா,

நேரிசை வெண்பா, 

இன்னிசை வெண்பா,

பஃறொடை வெண்பா )

53) ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்?

4

(நேரிசை ஆசிரியப்பா, 

இணைக்குறள் ஆசிரியப்பா, 

நிலைமண்டில ஆசிரியப்பா,

அடிமறி மண்டில ஆசிரியப்பா)























See Also :