6ஆம் வகுப்பு இயல்-4
ஆறாம் வகுப்பு
இயல்-4
1)மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
ஔவையார்
2)மாசற என்னும் சொல்லின் பொருள்?
குற்றம் இல்லாமல்
3)சீர்தூக்கின் என்னும் சொல்லின் பொருள்?
ஒப்பிட்டு ஆராய்ந்தால்
4)தேசம் என்னும் சொல்லின் பொருள்?
நாடு
5)ஔவையார் இயற்றிய நூல்கள்?
ஆத்திச்சூடி,
கொன்றை வேந்தன்,
நல்வழி,
6) மூதுரை என்னும் சொல்லின் பொருள்?
மூத்தோர் கூறும் அறிவுரை
7) மூதுரையில் எத்தனை பாடல்கள் உள்ளது?
31
8)மாணவர்கள் நூல்களை ………….. கற்க வேண்டும்.
மாசற
9)இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………
இடம் + எல்லாம்
10)மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………
மாசு + அற
11)குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்…………
குற்றமில்லாதவர்
12)சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்…………….
சிறப்புடையார்
13)ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
14) தூற்றும் படி என்னும் சொல்லின் பொருள்?
இகழும்படி
15)மூத்தோர் என்னும் சொல்லின் பொருள்?
பெரியோர்
16)மேதைகள் என்னும் சொல்லின் பொருள்?
அறிஞர்கள்
17)மாற்றார் என்னும் சொல்லின் பொருள்?
மற்றவர்
18)நெறி என்னும் சொல்லின் பொருள்?
வழி
19)வற்றாமல் என்னும் சொல்லின் பொருள்?
குறையாமல்
20) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் சிறப்பு பெயர் என்ன?
மக்கள் கவிஞர்
21)மாணவர் பிறர் …………. நடக்கக் கூடாது.
தூற்றும்படி
22)நாம் …………… சொல்படி நடக்க வேண்டும்.
மூத்தோர்
23)கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
கை + பொருள்
24)மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
மானம்மில்லா
25) ஆடு மேய்க்கும் சிறுவர்களையும் பள்ளிக்கூடம் செல்ல வழி செய்தவர் யார்?
காமராசர்
16) குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல நீண்ட தூரம் நடக்கக் கூடாது என்று எண்ணியவர் யார்?
காமராசர்
17) பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்களுக்கு ஒரு வேலை உணவாவது வழங்க வேண்டும் என்று நினைத்தவர் யார்?
காமராசர்
18) கல்விக்கண் திறந்தவர் என்று அழைக்கப்படுபவர் யார்?
காமராசர்
19)கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரை பாராட்டியவர் யார்?
தந்தை பெரியார்
20) காமராசரின் சிறப்பு பெயர்கள் யாவை?
பெருந்தலைவர்,
படிக்காத மேதை,
கர்மவீரர்,
கருப்புக் காந்தி,
ஏழைப்பங்காளர்,
தலைவர்களை உருவாக்குபவர்.
21)மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தியவர் யார்?
காமராசர்
22)மதிய உணவுத்
திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?
காமராசர்
23) குழந்தைகள் கல்வி
கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்?
காமராசர்
24) மதுரை பல்கலைக்கழகத்திற்கு என்ன பெயர் சூட்டப்பட்டது?
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
25) நடுவன அரசு காமராசருக்கு என்ன விருது வழங்கியது?
பாரதரத்னா
26) காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு?
1976
27) காமராசர் வாழ்ந்த எந்த இல்லங்கள் நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன?
சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம்
28) காமராசரின் சிலை எங்கு நிறுவப்பட்டது?
சென்னை மெரினா கடற்கரை
29) சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு யாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
காமராசர்
30) காமராசருக்கு எங்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது?
கன்னியாகுமரி
31)கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் அமைத்த ஆண்டு?
02.10.2000
32) காமராசர் பிறந்த நாள் எப்போது?
ஜூலை பதினைந்தாம் நாள்
32) காமராசர் பிறந்த நாள் என்ன நாளாக கொண்டாடப்படுகிறது?
கல்வி வளர்ச்சி நாள்
33)பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்…………………..
ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
34)பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……………….
பசி + இன்றி
35)படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………..
படிப்பு + அறிவு
36)காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்…………….
காட்டாற
37) ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?
அண்ணா நூற்றாண்டு நூலகம்
38) நூலக விதிகளை உருவாக்கியவர் யார்?
இரா. அரங்கநாதன்.
39)இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
இரா. அரங்கநாதன்
40) பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் தொட்டுப் பார்த்து படிப்பதற்கான நூல் எது?
பிரெய்லி நூல்கள்
41)சிறந்த நூலகர்களுக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?
ச.இரா.அரங்கநாதன் விருது
42) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மொத்தம் எத்தனை தளங்கள்?
எட்டு
(தரைத்தளம் - சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
முதல் தளம் - குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்.
இரண்டாம் தளம் - தமிழ் நூல்கள்.
மூன்றாம் தளம் - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்.
நான்காம் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி.
ஐந்தாம் தளம் - கணிதம், அறிவியல், மருத்துவம்.
ஆறாம் தளம் - பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை.
ஏழாம் தளம் - வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்.
எட்டாம் தளம் - கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு.
43)எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில்
ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இன எழுத்துக்கள்
44) எந்த எழுத்துகளில் குறளிக்கு நெடிலும் நெடிலுக்கு குறிலும் இன எழுத்துக்கள் ஆகும்?
உயிர் எழுத்துக்கள்
45)ஐ என்னும் எழுத்துக்கு இன எழுத்து எது?
இ
46)ஔ என்னும்
எழுத்துக்கு இன எழுத்து எது?
உ
47)தமிழ் எழுத்துகளில் ………… எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.
ஆய்த
48)மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய……………….வரும்
வல்லின எழுத்து
49)..............எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள்
ஆகும்.
மெய்
50)இடையின எழுத்துகள் ஆறும் ………… இனமாகும்.
ஒரே
51)Education என்பதன் தமிழ்ச்சொல்?
கல்வி
52)Primary School என்பதன் தமிழ்ச்சொல்?
தொடக்கப் பள்ளி
52)Higher Secondary School என்பதன் தமிழ்ச்சொல்?
மேல்நிலைப் பள்ளி
53)Library என்பதன் தமிழ்ச்சொல்?
நூலகம்
54)Escalator என்பதன் தமிழ்ச்சொல்?
மின்படிக்கட்டு
55)Lift என்பதன் தமிழ்ச்சொல்?
மின்தூக்கி
56)E-Mail என்பதன் தமிழ்ச்சொல்?
மின்னஞ்சல்
57)Compact Disk (CD) என்பதன் தமிழ்ச்சொல்?
குறுந்தகடு
58)E – Library என்பதன் தமிழ்ச்சொல்?
மின்நூலகம்
59)E - Book என்பதன் தமிழ்ச்சொல்?
மின்நூல்
60)E – Magazine என்பதன் தமிழ்ச்சொல்?
மின் இதழ்கள்
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
Post a Comment
image quote pre code