6ஆம் வகுப்பு இயல் -5
ஆறாம் வகுப்பு
இயல்-5
1)ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?
பெருவாயின் முள்ளியார்
2)பெருவாயின் முள்ளியார் எந்த ஊரில் பிறந்தவர்?
கயத்தூர்
3)ஆசாரக்கோவை என்பதன் பொருள் என்ன?
நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
4)ஆசாரக்கோவை எந்த நூல்களுள் ஒன்று?
பதினெண்கீழ்க்கணக்கு
5)ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களை கொண்டது?
100
6)நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
என்று தொடங்கும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
ஆசாரக்கோவை
7)நன்றியறிதல் என்ற சொல்லின் பொருள்?
பிறர் செய்த உதவியை மறவாமை
8)ஒப்புரவு என்ற சொல்லின் பொருள்?
எல்லோரையும் சமமாகப் பேணுதல்
9)நட்டல் என்ற சொல்லின் பொருள்?
நட்புக் கொள்ளுதல்
10)பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது ……….. ஆகும்.
பொறை
11)அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……..
அறிவுடைமை
12)இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………….
இவையெட்டும்
13)நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .. ……….
நன்றி அறிதல்
14)பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
பொறை + உடைமை
15) தாலாட்டு எந்த இலக்கியங்களுள் ஒன்று?
வாய்மொழி இலக்கியம்
16)தால் என்பதன் பொருள்?
நாக்கு
17)குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல்?
தாலாட்டு
18)முத்தேன் என்பது யாவை?
கொம்புத்தேன்,
மலைத்தேன்,
கொசுத்தேன்.
19)முக்கனி என்பது யாவை?
மா, பலா, வாழை
20)முத்தமிழ் என்பது யாவை?
இயல், இசை, நாடகம்
21)நந்தவனம் என்பதன் பொருள்?
பூஞ்சோலை
22)பார் என்பதன் பொருள்?
உலகம்
23)பண் என்பதன் பொருள்?
இசை
24)இழைத்து என்பதன் பொருள்?
பதித்து
25)பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………..
பாட்டு + இசைத்து
26)கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
கண் + உறங்கு
27)வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
வாழையிலை
28)கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
கையமர்த்தி
29)உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ……………..
மறைந்த
30)பொங்கல் விழா எவ்வாறு போற்றப்படுகிறது?
தமிழர் திருநாள்
31)கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா?
பொங்கல் விழா
32)உழவர்கள் எந்த திங்களில் விதைப்பர்?
ஆடி
33)உழவர்கள் எந்த திங்களில்அறுவடை செய்வர்?
தை
34)தைத்திங்களின் முதல் நாளில் கொண்டாடப்படுவது?
பொங்கல் விழா
35)அறுவடைத்திருவிழா என்றும் அழைப்பது?
பொங்கல் விழா
36)பொங்கல் விழா எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
தமிழர் திருநாள்,
அறுவடைத்திருவிழா,
உழவர் திருநாள்.
37)பழையன கழிதலும் புதியன புகுதலும்
என்ற அடி எதில் இடம்பெற்றுள்ளது?
புறநானூறு
38)வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள்?
போகித் திருநாள்.
39)மார்கழி மாதத்தின் இறுதி நாளில் கொண்டாடப்படுவது?
போகித் திருநாள்.
40) வாழ்க்கைக்கு வளம் தரும் மலைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது?
போகிப்பண்டிகை
41)பொங்கல் என்பதற்குப் பொருள் என்ன?
பொங்கிப்பெருகி வருவது
42)திருவள்ளுவர் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
தை இரண்டாம் நாள்
43)திருவள்ளுவராண்டு எப்போது தொடங்குகிறது?
தை முதல் நாள்
44)மாடு என்பதன் பொருள்?
செல்வம்
45)மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு?
மஞ்சுவிரட்டு
46)மஞ்சுவிரட்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாடுபிடித்தல்,
ஜல்லிக்கட்டு,
ஏறுதழுவுதல்.
47)அறுவடைத் திருநாள் "மகரசங்கராந்தி" என்ற பெயரில் எந்த மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது ?
ஆந்திரம்,
கர்நாடகம்,
மராட்டியம்,
உத்திரப் பிரதேசம்.
48)அறுவடைத் திருநாள் "லோரி" என்ற பெயரில் எந்த மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது ?
பஞ்சாப்
49)அறுவடைத் திருநாள் "உத்தராயன்" என்ற பெயரில் எந்த மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது?
குஜராத்,
இராஜஸ்தான்.
50) திருவள்ளுவர் பிறந்த ஆண்டு?
கி.மு.31
51)கதிர் முற்றியதும் …………………. செய்வர்
அறுவடை
52)விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ………………….. கட்டுவர்.
தோரணம்
53)பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………….
பொங்கலன்று
54)போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………..
போகி + பண்டிகை
55)பழையன கழிதலும் …………… புகுதலும்.
புதியன
56)மற்போரில் சிறந்தவர் யார்?
நரசிம்ம வர்மன்.
57)மாமல்லன் என்று அழைக்கப்படுபவர்?
நரசிம்ம வர்மன்.
58)மாமல்லபுரத்தில் அமைந்துள்ள முக்கியமான இடங்கள்?
1. அர்ச்சுனன் தபசு
2. கடற்கரைக் கோவில்
3. பஞ்சபாண்டவர் ரதம்
4. ஒற்றைக்கல் யானை
5. குகைக் கோவில்
6. புலிக்குகை
7. திருக்கடல் மல்லை
8. கண்ணனின் வெண்ணெய்ப் பந்து
9. கலங்கரை விளக்கம்.
59)சிற்பக் கலை வடிவமைப்புகள் எத்தனை வகைப்படும்?
நான்கு
குடைவரைக் கோயில்கள்,
ஒற்றைக் கல் கோயில்கள்,
கட்டுமானக் கோயில்கள்,
புடைப்புச் சிற்பங்கள்.
60) நரசிம்ம வர்மன் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
ஏழாம் நூற்றாண்டு
61) நரசிம்ம வர்மன் தந்தை பெயர்?
மகேந்திரவர்ம பல்லவர்
62) மாமல்லபுரம் சிற்பக் கலைகள் எத்தனை தலைமுறைகளில் உருவாக்கப்பட்டன?
நான்கு
63) அர்ச்சுனன் தவசின் வேறு பெயர்?
பகீரதன் தவம்
64) தமிழகத்தின் மிகப்பெரிய சிற்ப கலைக்கூடம் எது?
மாமல்லபுரம்
65) நான்கு வகை சிற்பக்கலை வடிவமைப்புகள் காணப்படும் ஒரே இடம் எது?
மாமல்லபுரம்
66) உச்சரிக்கும் போது சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகள்?
மயங்கொலிகள்
67) மயங்கொலிகள் மொத்தம் எத்தனை?
8 (ண, ன, ந
ல, ழ, ள
ர, ற )
68)நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியை த் தொடுவதால் ……………….பிறக்கிறது.
ணகரம்
69)நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால்………………பிறக்கிறது.
னகரம்
70)நாவின் நுனி மேல்வாய் ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் ……………..பிறக்கிறது.
நகரம்
71) ட் என்னும் எழுத்தில் இணை எழுத்து எது?
ண்
72) த் என்னும் எழுத்தின் இணை எழுத்து எது?
ந்
73) ற் என்னும் எழுத்தின் இணை எழுத்து எது?
ன்
74) வாணம் என்பதன் பொருள்?
வெடி
75)வானம் என்பதன் பொருள்?
ஆகாயம்
76)பணி என்பதன் பொருள்?
வேலை
77)பனி என்பதன் பொருள்?
குளிர்ச்சி
78)நாவின் இருபக்கங்க ள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் …………தோன்றும்
லகரம்
79)நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால். …………தோன்றும்.
ளகரம்
80)நாவின் நுனி மேல்நோக்கி வளைந்துவருடுவதால் ………..தோன்றும்.
ழகரம்
81)விலை என்பதன் பொருள்?
பொருளின் மதிப்பு
82)விளை என்பதன் பொருள்?
உண்டாக்குதல்
83)விழை என்பதன் பொருள்?
விரும்பு
84)இலை என்பதன் பொருள்?
செடியின் இலை
85)இளை என்பதன் பொருள்?
மெலிந்து போதல்
86)இழை என்பதன் பொருள்?
நூல் இழை
87)நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் …………. தோன்றுகிறது.
ரகரம்
88)நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால்………தோன்றுகிறது
றகரம்
89)ஏரி என்பதன் பொருள்?
நீர்நிலை
90)ஏறி என்பதன் பொருள்?
மேலே ஏறி
91)கூரை என்பதன் பொருள்?
வீட்டின் கூரை
92)கூறை என்பதன் பொருள்?
புடவை
93)Welcome என்பதன் தமிழ்ச்சொல்?
நல்வரவு
94)Sculptures என்பதன் தமிழ்ச்சொல்?
சிற்பங்கள்
95)Chips என்பதன் தமிழ்ச்சொல்?
சில்லுகள்
96)Readymade Dress என்பதன் தமிழ்ச்சொல்?
ஆயத்த ஆடை
97)Makeup என்பதன் தமிழ்ச்சொல்?
ஒப்பனை
98)Tiffin என்பதன் தமிழ்ச்சொல்?
சிற்றுண்டி
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
Post a Comment
image quote pre code