6ஆம் வகுப்பு இயல்-3
ஆறாம் வகுப்பு
இயல்-3
1) அகர வரிசையில் அறிவுரைகளை சொல்லும் இலக்கியம் எது?
ஆத்திச்சூடி
2) ஆத்திச்சூடியின் ஆசிரியர் யார்?
ஔவையார்
3) புதிய ஆத்திச்சூடி என்று காலத்திற்கு ஏற்ற அறிவுரைகளை கூறியவர் யார்?
பாரதியார்
4) அறிவியில் ஆத்திச்சூடி என்னும் நூலின் ஆசிரியர் யார்?
நெல்லை சு.முத்து
5) இயன்றவரை என்னும் சொல்லின் பொருள்?
முடிந்தவரை
6) ஒருமித்து என்னும் சொல்லின் பொருள்?
ஒன்றுபட்டு
7) ஔடதம் என்னும் சொல்லின் பொருள்?
மருந்து
8)”தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று பாராட்டப் பெற்றவர் யார்?
நெல்லை சு.முத்து
9)தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று நெல்லை சு.முத்துவை பாராட்டியவர் யார்?
அப்துல் கலாம்
10)நெல்லை சு.முத்து பணியாற்றிய நிறுவனங்கள்?
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்,
சதீஷ்தவான் விண்வெளி மையம்,
இந்திய விண்வெளி மையம்
11)உடல் நோய்க்கு ………..
தேவை
ஔடதம்
12)நண்பர்களுடன் ………….. விளையாடு
ஒருமித்து
13)‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………
கண்டு + அறி
14)‘ஓய்வற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………….
ஓய்வு + அற
15)ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
ஏனென்று
16)ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………….
ஔடதமாம்
17)அணுகு என்பதன் எதிர்ச்சொல் என்ன?
விலகு
18)ஐயம் என்பதன் எதிர்ச்சொல் என்ன?
தெளிவு
19)ஊக்கம் என்பதன் எதிர்ச்சொல் என்ன?
சோர்வு
20)உண்மை என்பதன் எதிர்ச்சொல் என்ன?
பொய்மை
21)வானை அளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.
என்ற பாடலை இயற்றியவர் யார்?
பாரதியார்
22)ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
ஆழம் + கடல்
23)விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
விண் + வெளி
24)நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
நீலவான்
25)இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………..
இல்லாதியங்கும்
26) ரோபோ என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார்?
காரல் கபெக்
27) காரல் கபெக் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
செக்
28) ரோபோ என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
அடிமை
29)ஐ.பி.எம். என்னும் என்னும் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினி எது?
டீப் புளூ
30)சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவிடம் போட்டியிட்டு வெற்றிபெற்றார் யார்?
டீப் புளூ
31) முதன் முதலாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு எது?
சவுதி அரேபியா
32) சவுதி அரேபியா குடியுரிமை வழங்கிய ரோபோவின் பெயர் என்ன?
சோபியா
33) ஐக்கிய நாடுகள் சபை புதுமைகளின் வெற்றியாளர் என்ற பட்டத்தை யாருக்கு கொடுத்தது?
சோபியா
34)நுட்பமாகச் சிந்தித்து அறிவது …………..
நுண்ணறிவு
35)தானே இயங்கும் இயந்திரம் …………..
தானியங்கி
36)நின்றிருந்த என்னும்’ சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
நின்று + இருந்த
37)‘அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ + உருவம்
38)மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
மருத்துவத்துறை
39)செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………..
செயலிழக்க
40)நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ………….
சேர்த்தல்
41)எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் …………..
அரிது
42)மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ……………..
எந்திரங்கள்
43)தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ………………
செயற்கை நுண்ணறிவு
44) அப்துல் கலாமிற்கு எந்த வயதில் அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட்டது?
பத்து வயது
45) அப்துல் கலாமிற்கு மிகவும் பிடித்த நூல் எது?
திருக்குறள்
46) அப்துல் கலாமின் வாழ்க்கையை வலுசேர்த்த குரலாக எதை கூறுகிறார்?
‘அறிவுஅற்றம் காக்கும் கருவி
செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்’
47) அப்துல் கலாம் அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றதாக கூறிய நூல் எது?
விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps)
48) விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps) என்ற நூலை எழுதியவர் யார்?
‘லிலியன் வாட்சன்'
49)கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான். எனவே குழந்தைகளாகிய நீங்கள்தாம் இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள்.
என்று கூறியவர் யார்?
அப்துல் கலாம்
50) மொழி என்பதன் பொருள்?
சொல்
51) சொல்லின் முதலில் வரும் எழுத்துக்களை……………………. என்பர்.
மொழி முதல் எழுத்துக்கள்
52)..................... சொல்லின் முதலில் வரும்.
உயிர் எழுத்துக்கள்
53) ங வரிசையில் எத்தனை எழுத்து சொல்லின் முதலில் வரும்?
ஒன்று (ங)
54) ஞ வரிசையில் எத்தனை எழுத்து சொல்லில் முதலில் வரும்?
நான்கு (ஞ, ஞா, ஞெ, ஞொ)
55) ய வரிசையில் எத்தனை எழுத்து சொல்லில் முதலில் வரும்?
ஆறு(ய, யா, யு, யூ,யோ ,யௌ)
56)வ வரிசையில் எத்தனை எழுத்து சொல்லில் முதலில் வரும்?
எட்டு (வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ)
57)................. எழுத்து சொல்லின் முதலில் வராது.
ஆய்த எழுத்து
58) சொல்லின் இறுதியில் வரும் எழுத்துக்களை………… என்பர்.
மொழி இறுதி எழுத்துகள்
59) மொழியின் இறுதியில் வரும் மெய் எழுத்துக்கள் எத்தனை?
பதினொன்று( ஞ், ண், ந், ம், ய் ,ர், ல், வ், ழ், ள், ன்)
60) சொல்லின் இறுதியில் எந்த எழுத்துக்கள் தனித்து வருவதில்லை?
உயிர் எழுத்துக்கள்
61)அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் …………………. வரும்
சொல்லின் இறுதியில்
62) சொல்லின் இறுதியில் வராத மெய் எழுத்துக்கள் எத்தனை?
ஏழு(க், ங், ச், ட், த், ப், ற்)
63)எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெ ய் எழுத்தும் மொழி…………..வருவதில்லை
இறுதியில்
64)நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்?
துன்பம்
65)................... சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
ஆய்த எழுத்து
66)...................மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
அளபெடையில்
67)Artificial Intelligence என்பதன் தமிழ்ச்சொல்?
செயற்கை நுண்ணறிவு
68) Super Computer என்பதன் தமிழ்ச்சொல்?
மீத்திறன் கணினி
69)Satellite என்பதன் தமிழ்ச்சொல்?
செயற்கைக் கோள்
70)Intelligence என்பதன் தமிழ்ச்சொல்?
நுண்ணறிவு
Post a Comment
image quote pre code